நேற்று   (16.04.2020)ஆவடி மற்றும் வீராபுரம் பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு பூமிகா நிறுவனத்தின் உதவியுடன், இனியஉதயம் தொண்டுநிறுவனம் தமிழக அரசு வழிக்கட்டுதலின் படி ஆவடி தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் வீராபுரம் தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் முன்னிலையில் ரூபாய் 1500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 10 நாட்களுக்கு தேவையான வழங்கப்பட்டது.அனைவருக்கு முககவசம் கொடுத்து தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் திருமதி,கோமளா அவர்கள் 144 சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதலிருந்து இன்று வரை மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகிறார். பொது மக்களுக்கு தேவையான தேவைகள் பூர்த்தி செய்துவருகிறார்.

இந்த நிகழ்வின்போது இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் செயல் திட்ட மேலாளர் திரு.ஹரிஷ்குமார், ஆசிரியர் சாமுண்டீஸ்வரி மற்றும் அப்பகுதியில்  தன்னார்வலர்கள் மகாலட்சுமி,வெங்கடேசன்,பாலமுருகன்,இளமாறன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

இன்னும் நிறைய மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.நீங்கள் நினைத்தால் மக்களின் பசியை போக்கி அவர்களிடத்தில் மகிழ்ச்சியை காணலாம் என்று கூறி சமூகத்தை அழைத்தார் திருமதி கோமளா அவர்கள்.

விழித்திரு!  விலகி இரு!!  வீட்டில் இரு!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore More

Food for Elder citizen

Dear Friends and Well-Wishers, Iniyaudaiyam charitable trust is working for children,Youth and women for their education,Health and livelihood development programs from 2004. Thanks to  your congrats, wishes, and Encouraging  Our

தேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT)

144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின்

தொடரும் கொரொனாநிவாரணம்

தொடரும் கொரொனா ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரதில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (குடும்பங்களுக்கு) தொடர்ந்து இனிய உதயம் தொண்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை 22.07.2020 அன்று ஆவடி அருந்ததிபுரம் பகுதியில் உள்ள 220 அருந்ததியர்