•  |  :
image-title

மோரை-ஜன14. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (14.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் மோரை பஞ்சாயத்தில் உள்ள புதிய கன்னியம்மன் நகரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் சாமுண்டீஸ்வரி மற்றும் லைலா முன்னிலையில் மாணவி பிரியதர்ஷினி வரவேற்புரையை வழங்கினார்.

The Pongal ceremony was held at 10.30 am today (14.01.2020) in New Kanniyamman Nagar, Morai Panchayat, Mooriya Panchayat. The Pongal ceremony was presided over by Mrs. Komla, Founder of ‘Happy Udayam’ charity, Pramodarshini, a student, presenting a welcome address in the presence of Chamundeswari and Laila.


இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக புதிய கன்னியம்மன் நகர் பொதுநல சங்கத்தின் நிர்வாகிகளான திரு.வெங்கடேசன்,திரு,பாலகுமார்,திரு.இளமாறன்,கண்ணன் மற்றும் திரு.சிலம்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

The event was attended by Mr. Venkatesan, Mr., Balakumar, Mr. Ilamaran, Mr. Kannan and Mr.Silambarasan.

 

இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.குழந்தைகளுக்கு கோலப்போட்டி,பலூன்கள் உடைத்தல்,கண்ணை கட்டி பொட்டு வைத்தல்,நடனம் மற்றும் சிலம்பாட்டம் என பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

More than 75 children and parents participated in the Pongal Festival. A variety of sports competitions were held for the children such as rookies, balloons, eyelashes, dancing and chilampattam.


மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் புஷ்பா, மேரி, காயத்ரி, நிவேதா, மேகலா, மகேந்திரவர்மன் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் மெல்வின் மற்றும் தாமஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள்.

Avatar photo
Iniya Udaiyam

Iniya Udaiyam has blogged 300 posts

Leave a Reply

Your email address will not be published.