•  |  :
image-title
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் 22.10.2022 அன்று மாலை 5 முதல் இரவு 7 வரை ஆவடி புதுநகர் மற்றும் புதிய கண்ணியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் கோலாகலமாக தீபாவளி கொண்டாட்டம் கொண்டாடப்பட்டது.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் திரு.பிரசன்னா திருமதி. சவிதா மற்றும் ஜெகத் ஆகியோர் உணவு வழங்கி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து,  திரு நரேஷ் பிரபு அவர்கள் புத்தாடை கொடுத்து குழந்தைகளை மகிழ செய்தார். பிறகு அனைத்து குழந்தைகளுக்கும் திரு சஞ்சீவி அறவப்பள்ளி மற்றும் திருமதி. ஷீலா சஞ்சீவி அவர்கள் பாரம்பரிய இனிப்பு மிகுந்த லட்டை கொடுத்து இன்பமான தீபாவளியை கொண்டாடச் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐகிவர் நிறுவனம் சார்பாக அனைத்து குழந்தைகளுக்கும் குலோப் ஜாமுன் மற்றும் சீடைகள் அடங்கிய பேக்குகளை கொடுத்து மகிழ்ந்தனர். மொத்தத்தில் 
இந்த தீபாவளி குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது
குழந்தைகள் அனைவரும் இனிப்புகளையும் புத்தாடைகளையும் லட்டுகளையும் வாங்கிக்கொண்டு உணவையும் ருசித்து உண்டு மகிழ்ந்தனர்.
 
இந்த நிகழ்வில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் கோமளா சிவகுமார் அவர்களும் பவித்த ரஞ்சனி மற்றும் ஜெய் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மாலை நேர மையங்களில் இருக்கும் ஆசிரியர்கள் ஜீவிதா கீர்த்தனா சக்தி மதுமிதா மற்றும் கார்த்திகா அனைவரும்அருமையாகஇந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்
இந்த அருமையா தீபாவளி திருநாளில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் குழந்தைகளுக்கு அனைத்தையும் வழங்கிய அனைத்து கொடையாளர்களுக்கும் இனிய உதயம் துண்டு நிறுவனத்தின் சார்பாகவும் குழந்தைகள் சார்பாகவும் ஆசிரியர்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
Read More