•  |  :
image-title

        உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மகளிர் மகளிர் தின சிறப்புகள் குறித்தும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்குநல்ல அறிவுரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு பழம்பெரும் தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காலையில் 10.30 மணி முதல் 1.00

மணி வரையிலும் மதியம் 2 .10 மணி முதல் 4 .20 வரை வீராபுரம் பள்ளியிலும் இந்த

வகுப்புகள் கொடுக்கப்பட்டதுஇந்த பயிற்சியில் 110க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் இந்த பெயர்ச்சியில் பெண் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த 110 குழந்தைகளில் 40க்கும்                                               மேற்பட்ட குழந்தைகள் எங்களுக்கு இந்த தற்காப்பு     கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த தற்காப்பு கலையான சிலம்ப

பயிற்சி ஆசிரியர் ராமையா மற்றும் சியான் ராஜ் மிக சிறப்பாக குழந்தைகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுத்தன

ர்.

Read More
image-title

                                                                 
                                                                         உலகை அச்சுறுத்தும் கொரோனா

இனியஉதயம் தொண்டு நிறுவத்தின் சார்பாக நேற்று (13.03.2020) கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதுநகரில் உள்ள இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தில் மாலை 6.00மணி முதல் 7.00 வரை மிகக் சிறப்பாக நடைப்பெற்றது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் அதை எவ்வாறு தடுப்பது (எதிர்கொள்வது) என்பதையும் குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது. அப்போது, கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். கண்,மூக்கு மற்றும் வாய் ஆகிய பகுதிகளை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும் என்றும் “வைட்டமின் C” நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.

இரும்பும்போதும் தும்பும்போது கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும் மேலும் முக கவசமும் (FACE MASK)அணிவது சிறந்ததாகும் என்றும் சுடுநீரில் எலிமிச்சம்பழ சாறு கலந்து குடிக்கவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லப்பட்டது.                                                                                           

இந்த கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 60க்கு மேற்ப்பட்ட                     குழந்தைகள் கலந்துக்கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு                                              தெரிந்துக்கொண்டனர்கள்.கலந்துக்கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும்                            அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சி பழங்கள் கொடுக்கப்பட்டது.

இந்த கொரோன                       வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுநகர் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தின் ஆசிரியர்கள் செல்வி.மேகலா மற்றும் செல்வி.நிவேதா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். உடன் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் திரு.ஹரிஷ்குமார்

 

 

Read More
image-title

ஆவடி,-ஜன18. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (18.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள புதுநகரில் எஸ்.எஸ்.மாலைநேர திறன்வளர் மையத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு. S.ஹரிஷ் குமார் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் நிவேதா முன்னிலையில் மேகலா வரவேற்புரையை வழங்கினார்.

இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள், முன்னால் வார்டு உறுப்பினர் திரு.M.குமார், காமாட்சி குமார் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

   

இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் 30 க்கு மேற்ப்பட்ட பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர். குழந்தைகளுக்கு இசை நாற்காலி, நாடகம், நடனம், பாட்டலில் தண்ணீர் நிரப்புதல்,ஓட்டபந்தயம், கோலப்போட்டி, பலுன் உடைத்தல்,பிஸ்கட் சாப்பிடுதல், மற்றும் லெமன் ஸ்பூன் என பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளில் பெற்றோர்களும் ஆர்வமாக கலந்துக்கொண்டு பரிசுகளை வென்றனர்.

   

மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர் புஷ்பா, மற்றும் லயோலா கல்லூரி மாணவர் தாமஸ், சகோதரர் சுஜித், தன்னார்வலர்கள் நவீன், திவ்யா ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள்.

 

Avadi, january 18. The Pongal ceremony was held on 10.01.2010 at the SS Mallavi Talent Center in Pudunagar, Thiruvallur District.

The Pongal ceremony, chaired by S. Harish Kumar, was presented by Meghala in the presence of Nivetha.

The special invitees at the Pongal ceremony were Mrs. Komala, Founder of the Iniya Uthayam NGO, Mr. M. Kumar, Kamakshi Kumar and Williams, Ward members.

More than 75 children and over 30 parents participated in the event. A variety of sports competitions were held for children, including music, play, dancing, bottled water, racing, scoring, ballooning, biscuit eating, and lemon spoon. Parents also took part in these competitions and won prizes.

Pushpa, the editor of  Heart charity, and Thomas, Brother Sujith, Loyola College student, volunteers Naveen and Divya attended the function.

Read More
image-title

மோரை-ஜன14. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (14.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் மோரை பஞ்சாயத்தில் உள்ள புதிய கன்னியம்மன் நகரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடந்த இந்த பொங்கல் விழாவில் சாமுண்டீஸ்வரி மற்றும் லைலா முன்னிலையில் மாணவி பிரியதர்ஷினி வரவேற்புரையை வழங்கினார்.

The Pongal ceremony was held at 10.30 am today (14.01.2020) in New Kanniyamman Nagar, Morai Panchayat, Mooriya Panchayat. The Pongal ceremony was presided over by Mrs. Komla, Founder of ‘Happy Udayam’ charity, Pramodarshini, a student, presenting a welcome address in the presence of Chamundeswari and Laila.


இந்த பொங்கல் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக புதிய கன்னியம்மன் நகர் பொதுநல சங்கத்தின் நிர்வாகிகளான திரு.வெங்கடேசன்,திரு,பாலகுமார்,திரு.இளமாறன்,கண்ணன் மற்றும் திரு.சிலம்பரசன் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

The event was attended by Mr. Venkatesan, Mr., Balakumar, Mr. Ilamaran, Mr. Kannan and Mr.Silambarasan.

 

இந்த பொங்கல் விழாவில் 75க்கு மேற்பட்ட குழந்தைகளும் பெற்றோர்களும் கலந்துக்கொண்டனர்.குழந்தைகளுக்கு கோலப்போட்டி,பலூன்கள் உடைத்தல்,கண்ணை கட்டி பொட்டு வைத்தல்,நடனம் மற்றும் சிலம்பாட்டம் என பலவிதமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அனைவருக்கும் பரிசுகள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.

More than 75 children and parents participated in the Pongal Festival. A variety of sports competitions were held for the children such as rookies, balloons, eyelashes, dancing and chilampattam.


மேலும் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் ஆசிரியர்கள் புஷ்பா, மேரி, காயத்ரி, நிவேதா, மேகலா, மகேந்திரவர்மன் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் மெல்வின் மற்றும் தாமஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்கள்.

Read More
image-title

இனியஉதயம் தொண்டுநிருவனத்தின் முறைசாரா கல்வி மையம்(Non-Formal Education Centre)

December 11 – Inauguration of the Non-Formal Education Center at JJ Nagar in Morai Panchayat on behalf of  Iniya Udaiyam charitable trust at 4.30pm in a simple manner.

The purpose of this non-formal education center is to find “dropout children in school and children who do not go to school” and making them to join in nearby schools. The aim of the Iniya Udaiyam charitable trust is to provide quality education to these children. The ceremony began with a game called “A single throw” for special guests. The event was chaired by Mrs. Komala, Founder of the Iniya Udaiyam charitable trust and the event was led by Mr.Allahbagesh.Special guests Mrs. Sahayaprabhu (Additional Government Public Prosecutor, Tiruvallur) and Mr. Nadarajan (Chief Manager.Wheels India) cut the ribbon and opened the Non-formal education center.Mr. Praveenraj (Smile Foundation), Mr. Sathyanarayanan (Editor of People Today), Mrs. Sobhana, Mr. Ravi and Mr. Sivakumar were also present in this event. For making this event grand our staff Mrs.Samundeswari thanked Mrs. Pushpa, Mrs. Mary, Mrs. Shakiladevi, Mr.Mahendravarman Mrs.Vinitha and Volunteers College students Roslyn, Madhumita and all the special invitees, parents and children, on behalf of Iniya Udaiyam charitable trust.

 

டிசம்பர் 11- இனியஉதயம் தொண்டுநிரறுவனத்தின் சார்பில் மோரே பஞ்சாயத்தில் ஜெ.ஜெ.நகரில் முறைசாரா கல்வி மையம்(Non Formal Education Centre) திறப்புவிழா மாலை 4.30 மணிக்கு எளிமையான முறையில் இனிமையாக நடைப்பெற்றது.

இந்த முறைசாரா கல்வி மையத்தின் (Non Formal Education Centre) நோக்கம்: இப்பகுதில் பள்ளிக்கு சென்று இடையில் நின்ற (Dropout) குழந்தைகள் மற்றும் பள்ளிக்கே போகாதே குழந்தைகள் அதிகமாக உள்ளனர். அக்குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டும் என்பதே இனியஉதயம் உதயம் தொண்டுநிருவனத்தின் நோக்கமாகும்.
இந்த விழாவில் துவக்கத்தில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு “ ஒரே அடி “ என்ற விளையாட்டுடன் விழா துவங்கப்பட்டது.


இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடந்த இந்த விழாவில் திரு அல்லா பகேஷ் முன்னிலை வகித்தார்.
இந்த முறைசாரா கல்வி மையத்தை சிறப்பு அழைப்பாளர்கள் திருவாளர் சகாயபிரபு (கூடுதல் அரசுபொது வழக்கறிஞர் திருவள்ளூர்) மற்றும் திருவாளர் நடராஜன் (தலைமை மேலாளர்.வீல்ஸ் இந்தியா நிறுவனம்) ஆகியோர் ரிப்பன் வெட்டி முறைசாரா கல்வி மையத்தை திறந்து வைத்தனர்.
மேலும் இவ்விழாவில் திரு.பிரவீன்ராஜ் (ஸ்மைல் பௌண்டேசன்)திரு.சத்தியநாராயணன் (ஆசிரியர் பீப்பில்டுடே)திருமதி சோபனா (தி.கி.ம.ம.அ.த.பிஜேபி)திரு.ரவி (தி.வ.ம.ஒ.த.பிஜேபி) மற்றும் திரு சிவகுமார் (மோ.ஊ,த.பிஜேபி) ஆகியோரும் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
திறப்புவிழா ஏற்பாட்டை மிகச்சிறப்பாக செய்த நிறுவனத்தின் பணியாளர்கள் திருமதி புஷ்பா,திருமதி மேரி,திருமதி ஷகிலாதேவிசெல்வன் மகேந்திரவர்மன் செல்வி.வினிதா மற்றும் தன்னார்வலர்கள் கல்லூரி மாணவிகள் ரோஸ்லின்,மதுமிதா மற்றும் அணைத்து சிறப்பு அழைப்பாளர்களுக்கும் பெற்றோர்களுக்கும் குழந்தைகள் அனைவருக்கும் இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் சார்பாக நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார் திருமதி.சாமுண்டீஸ்வரி அவர்கள்.

 

Read More
image-title

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பூர் ஒன்றியம் போந்துர் கிராமத்தில் உள்ள அரசு  நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் CSR உதவியுடன் கட்ட10.07.2019 அன்று போடப்பட்டது.

Bhoomi Pooja was held on 10.07.2019 on behalf of the charity Udaya Udaya Charity, a two-storied building at Government Middle School in Sriperumbur Union Union Pondur Village, Kanchipuram District.

Read More
image-title

On 20.07.2019, IniyaUdayam Charitable Trust and Fusion jointly hosted the General Medical Camp – Minajur from 10.30am to 2.00pm.

The general doctor, ENT doctor, and gynecologist were present at the Medical Camp.

Over 150 adults and children participated in this general medical camp.

20.07.2019 அன்று இனிய உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் Fusion நிறுவனம் இணைந்து பொது மருத்துவ முகாம் – மீஞ்சூரில் காலை 10.30 மணி முதல் மதியம் 2.00மணி வரை மிகச்சிறப்பாக நடந்தது.

இந்த பொது மருத்துவ முகாமில் பொது மருத்துவர், ENT மருத்துவர் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆகியோர் வந்திருந்தனர்.

இந்த பொது மருத்துவ முகாமில் 150க்கு மேற்பட்ட பெரியவர்களும் குழந்தைகளும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்கள்.

Read More
image-title

On Every Year of January, we are conducting Thamizha Thamizha with different concepts of clean green and give.

Venue: 4, Arundhathipuram, Avadi, Chennai-54.

Date: Jan 2nd week of Sunday

Time: 10am – 5pm.

Read More