தொடரும் கொரொனா ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரதில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு (குடும்பங்களுக்கு) தொடர்ந்து இனிய உதயம் தொண்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இன்று வரை 22.07.2020 அன்று ஆவடி அருந்ததிபுரம் பகுதியில் உள்ள 220 அருந்ததியர் குடும்பங்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக 10கிலோ அரிசி , 2கிலோ கடலைப் பருப்பு மற்றும் முககவசம் (Mask) திருமதி கோமளா அவர்களால் வழங்கப்பட்டது..
அதனை தொடர்ந்து, 24.07.2020 அன்று ஆவடி கௌரிபேட்டையில் உள்ள மிகவும் பின் தங்கிய 120 குடும்பங்களுக்கு கொரொனா நிவாரணம் வழங்கபட்டது. இந்த 120 குடும்பங்களில் 50க்கு மேற்பட்ட வட மாநில குடும்பங்கள் உள்ளன. இந்த அனைத்து குடும்பங்களுக்கும் 10 கிலோ அரிசி 2கிலோ கடலை பருப்பு மற்றும் முககவசம் வழங்கப்பட்டது.
இவை அனைத்தும் மதிய மாநில அரசுகளின் அறிவுறுதலின் படி தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து, அனைவரும் முககவசம் அணிந்து கொரொனா நிவாரணங்களை பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply