•  |  :
image-title

இனிய உதயம் தொண்டு நிறுவனம் நேற்று (19 .4 .2020) ஆவடியில் உள்ள அருந்ததிபுரதில் அருந்ததியர்கள் அதிகமாக வாழும் இந்தபகுதியில் சுமார் 300 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் கட்டடத் தொழில் மற்றும் தினக்கூலி  ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில் அவர்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தமிழக அரசு வழிகாட்டுதலின்படி தனிநபர் இடைவெளி கடைப்பிடித்து மருத்துவர்கள் முன்னிலையில் 100 குடும்பங்களுக்கு எண்ணெய், ஆட்டா மற்றும் உருளைக்கிழங்கு கொடுக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Read More
image-title

நேற்று   (16.04.2020)ஆவடி மற்றும் வீராபுரம் பகுதிகளில் ஊரடங்கு நீடிக்கப்பட்டதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் மனதளவில் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். உணவின்றி தவிக்கும் அவர்களுக்கு பூமிகா நிறுவனத்தின் உதவியுடன், இனியஉதயம் தொண்டுநிறுவனம் தமிழக அரசு வழிக்கட்டுதலின் படி ஆவடி தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் வீராபுரம் தாசில்தார் மற்றும் வருவாய் அலுவலர் முன்னிலையில் ரூபாய் 1500 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 10 நாட்களுக்கு தேவையான வழங்கப்பட்டது.அனைவருக்கு முககவசம் கொடுத்து தனிநபர் இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் நிறுவனர் திருமதி,கோமளா அவர்கள் 144 சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டதலிருந்து இன்று வரை மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகிறார். பொது மக்களுக்கு தேவையான தேவைகள் பூர்த்தி செய்துவருகிறார்.

இந்த நிகழ்வின்போது இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் செயல் திட்ட மேலாளர் திரு.ஹரிஷ்குமார், ஆசிரியர் சாமுண்டீஸ்வரி மற்றும் அப்பகுதியில்  தன்னார்வலர்கள் மகாலட்சுமி,வெங்கடேசன்,பாலமுருகன்,இளமாறன்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

இன்னும் நிறைய மக்கள் உணவின்றி தவித்து வருகிறார்கள்.நீங்கள் நினைத்தால் மக்களின் பசியை போக்கி அவர்களிடத்தில் மகிழ்ச்சியை காணலாம் என்று கூறி சமூகத்தை அழைத்தார் திருமதி கோமளா அவர்கள்.

விழித்திரு!  விலகி இரு!!  வீட்டில் இரு!!!

Read More
image-title

வருமுன் காப்போம் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, கைகளை எவ்வாறு கழுவவேண்டும் என்றுசெய்முறையை விளக்குகிறார் இனியஉதயம் தொண்டுநிறுவனம் ஆவடி மாலைநேர மையத்தில் பயிலும் மாஸ்டர் தர்சன்அவர்கள்.

                     

Read More
image-title

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடிகள், மன அழுத்தம் மக்களை மிகவும் பாதித்துள்ளது. குடும்பங்களில் சேமிப்பு எதுவும் இல்லதாத நிலையில் தடுமாற்றங்கள். அதில் முதன்மையானது பசி. பெரியவர்கள் சூழ்நிலையை அறிவர். குழந்தைகள் எப்படி?

இனியஉதயம் தொண்டுநிறுவனம்  ஆவடி பகுதியில் குழந்தைகளுக்கு மதிய உணவு தனிநபர் இடைவெளியில் வழங்கி வருகிறது.நீங்களும் உதவ முன்வரலாம்.

தற்சமயம் அவர்களுக்கு தேவையான பொருட்கள்:
அரிசி..
பருப்பு

எண்ணெய்

சர்க்கரை
மசாலா பொருட்கள்
சோப்பு,
பிஸ்கட் (குழந்தைகளுக்கு)
உலர்ந்த பழங்கள் (Dry Fruits) (குழந்தைகளுக்கு)
முகவரி:இனியஉதயம் தொண்டுநிறுவனம்
எண்.4/1,அருந்ததிபுரம் மெயின் ரோடு,
ஆவடி,சென்னை 600054.
7904195163 / 9444423600
 
Read More
image-title

144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் திட்ட செயல்பாட்டாளர் திரு.ஹரிஷ் குமார், மாலைநேர மையத்தின் ஆசிரியர்கள் செல்வி நிவேதா மற்றும் மேகலாவும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள் தேச நலனில்…..

 

 

 

 

 

 

 

 

 

Read More