•  |  :
image-title

வீட்டில் இருப்போம் !          கொரோனாவை விரட்டுவோம்.!!

இனியஉதயம் உதயம் தொண்டுநிறுவனம் (IUCT) கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு மக்களிடைய அளித்து வருகிறோம்.

முன்னதாக 13.03.2020 அன்று கொடுக்கப்பட்ட லிங்க் https://iniyaudaiyamngo.org/corona-virus-awarness

அதனை தொடர்ந்து நேற்று 24.03.2020 இனியஉதயம் தொண்டுநிருவனத்தின் (IUCT) நிறுவனர் திருமதி.கோமளா அவர்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று எவ்வாறு எதிர்கொள்ளவது எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது பற்றிய விரங்களை சொல்லி அவர்களுக்கு HAND WASH, FACE MASK and FACIAL TISSUSE PAPERS ஆகிய பொருட்கள் வழங்கினார்.
அனைவரும் வீட்டில் இருப்போம் !
கொரோனாவை விரட்டுவோம்.!!
தனித்திருப்போம்! கொரோனாவை தடுத்து நிறுத்துவோம்!!

 

Read More
image-title

        உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் வீராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள பெண் குழந்தைகளுக்கு மகளிர் மகளிர் தின சிறப்புகள் குறித்தும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்குநல்ல அறிவுரைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு பழம்பெரும் தற்காப்புக் கலையான சிலம்பம் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஆவடி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காலையில் 10.30 மணி முதல் 1.00

மணி வரையிலும் மதியம் 2 .10 மணி முதல் 4 .20 வரை வீராபுரம் பள்ளியிலும் இந்த

வகுப்புகள் கொடுக்கப்பட்டதுஇந்த பயிற்சியில் 110க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் இந்த பெயர்ச்சியில் பெண் குழந்தைகள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த 110 குழந்தைகளில் 40க்கும்                                               மேற்பட்ட குழந்தைகள் எங்களுக்கு இந்த தற்காப்பு     கலையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த தற்காப்பு கலையான சிலம்ப

பயிற்சி ஆசிரியர் ராமையா மற்றும் சியான் ராஜ் மிக சிறப்பாக குழந்தைகளுக்கு சிலம்பம் பயிற்சி கற்றுக் கொடுத்தன

ர்.

Read More
image-title

                                                                 
                                                                         உலகை அச்சுறுத்தும் கொரோனா

இனியஉதயம் தொண்டு நிறுவத்தின் சார்பாக நேற்று (13.03.2020) கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதுநகரில் உள்ள இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தில் மாலை 6.00மணி முதல் 7.00 வரை மிகக் சிறப்பாக நடைப்பெற்றது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் அதை எவ்வாறு தடுப்பது (எதிர்கொள்வது) என்பதையும் குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது. அப்போது, கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். கண்,மூக்கு மற்றும் வாய் ஆகிய பகுதிகளை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும் என்றும் “வைட்டமின் C” நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.

இரும்பும்போதும் தும்பும்போது கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும் மேலும் முக கவசமும் (FACE MASK)அணிவது சிறந்ததாகும் என்றும் சுடுநீரில் எலிமிச்சம்பழ சாறு கலந்து குடிக்கவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லப்பட்டது.                                                                                           

இந்த கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 60க்கு மேற்ப்பட்ட                     குழந்தைகள் கலந்துக்கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு                                              தெரிந்துக்கொண்டனர்கள்.கலந்துக்கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும்                            அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சி பழங்கள் கொடுக்கப்பட்டது.

இந்த கொரோன                       வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுநகர் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தின் ஆசிரியர்கள் செல்வி.மேகலா மற்றும் செல்வி.நிவேதா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். உடன் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் திரு.ஹரிஷ்குமார்

 

 

Read More