உலகை அச்சுறுத்தும் கொரோனா

இனியஉதயம் தொண்டு நிறுவத்தின் சார்பாக நேற்று (13.03.2020) கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி புதுநகரில் உள்ள இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தில் மாலை 6.00மணி முதல் 7.00 வரை மிகக் சிறப்பாக நடைப்பெற்றது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வும் அதை எவ்வாறு தடுப்பது (எதிர்கொள்வது) என்பதையும் குழந்தைகளுக்கு விளக்கப்பட்டது. அப்போது, கைகளை அவ்வப்போது நன்றாக கழுவ வேண்டும். கண்,மூக்கு மற்றும் வாய் ஆகிய பகுதிகளை தொடுவதற்கு முன் கைகளை நன்றாக சுத்தம் செய்யவேண்டும் என்றும் “வைட்டமின் C” நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.

இரும்பும்போதும் தும்பும்போது கைக்குட்டையை பயன்படுத்தவேண்டும் மேலும் முக கவசமும் (FACE MASK)அணிவது சிறந்ததாகும் என்றும் சுடுநீரில் எலிமிச்சம்பழ சாறு கலந்து குடிக்கவேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லப்பட்டது.                                                                                           

இந்த கொரோன வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 60க்கு மேற்ப்பட்ட                     குழந்தைகள் கலந்துக்கொண்டு தங்களின் சந்தேகங்களை கேட்டு                                              தெரிந்துக்கொண்டனர்கள்.கலந்துக்கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும்                            அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சி பழங்கள் கொடுக்கப்பட்டது.

இந்த கொரோன                       வைரஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை புதுநகர் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் மாலைநேர திறன்வளர் மையத்தின் ஆசிரியர்கள் செல்வி.மேகலா மற்றும் செல்வி.நிவேதா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்தனர். உடன் இனியஉதயம் தொண்டு நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் திரு.ஹரிஷ்குமார்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore More

தேச நலனில் இனிய உதயம் தொண்டு நிறுவனம் (IUCT)

144 தடைச் சட்ட ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கும் இந்த தருணத்தில், மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிடைக்க ஆவடி மாநகராட்சி தன்னார்வலர்கள் மூலம் இந்த சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்த சேவையில் இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின்

Pongal Celebration

ஆவடி,-ஜன18. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (18.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள புதுநகரில் எஸ்.எஸ்.மாலைநேர திறன்வளர் மையத்தில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் திரு. S.ஹரிஷ்

சர்வதேச விதவைகள் தினம்(International Widows’ Day)

நேற்று (23.06.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் 20க்கு மேற்பட்ட மக்களுக்கு(விதவைகள்பெண்கள்) புடைவையும் உணவும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஊக்கமும் உட்சாகமும் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு வழங்கினார் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள்…