







நேற்று (11.11.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நல்லூர் பகுதி, மடிப்பாக்கம், ராஜீவ்காந்தி நகர் மற்றும் மீனம்பாக்கம் NGO காலனி ஆகிய பகுதிகளில் உள்ள 150க்கு மேற்பட்ட மக்ககளுக்கு உணவுகள் வழங்கப்பட்டது. இந்த சேவையில் இனியஉதயம் தொண்டுநிறுவனத்தின் தன்னார்வலர்கள் S.P. ராஜ், பிலிப்ஸ் மற்றும் இஸ்ரவேல் ஆகியோர் சேவைப்புரிந்தனர்.
அன்புள்ளம் கொண்டோரே….
மகிழ்வித்து மகிழ் (Joy of giving) மாதத்தில் குழந்தைகளின் நலனை வலுபடுத்த பள்ளி திறக்கப்பட்டதால் ஏழை மாணவ மாணவிகளுக்கு மாஸ்க், சானிடைசர் மற்றும் ஊட்டசத்து பொருட்கள் கொடுக்க நிதி திரட்டி வருகிறோம். உங்களின் கருணை மிகுந்த பங்களிப்பை கீழே உள்ள லிங்கை (Link) கிளிக் செய்து நிதி அளித்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வருங்கால சந்ததியரை நலமோடு காப்பது நமது கடமையாகும்.
IUCT have been raising funds to provide masks, sanitizers and nutritional products to poor students as the school reopens to strengthen the welfare of children during the month of Joy of giving.
We kindly ask you to donate your kind contribution by clicking the link below. It is our duty to safeguard future generations.
https://bob2021.giveindia.org/projects/healthy-children-wealthy-citizen-protect-children-from-corona-virus/,
செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 29.08.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தை உரிமை பாதுகாப்பு தோழமை கூட்டமைப்பு மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ச்சி பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள் தலைமையிலும், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் திரு சிவகுமார் அவர்கள் முன்னிலையில் ACDS நிறுவ
னத்தின் இயக்குனர் திரு தேவன்பு அவர்கள் பயிற்சி அளித்தார்.
இப்பயிற்சியில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் CRPF செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக UNCRC, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைத் தொழிலாளர் (ஒழுங்குமுறை) மற்றும் (முறைப்படுத்துத
ல்) சட்டம் போன்றவற்றின் மீது பயிற்சி விரிவாக வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் அவர்கள் கிராம அளவில் குழந்தைகளுக்காக உள்ள வளங்கள், வாய்ப்புகள், குழந்தைகளுக்கான பிரச்சினைகள் எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் எப்படி சரிசெய்வது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
அதன்பின் குழந்தை உரிமை பாதுகாப்பு குழு பங்கேற்பாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகள் தங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கான செயல்திட்டம் குறித்து திட்ட வரைவுரை செய்தனர்
இறுதியாக குழந்தை உரிமை பாதுகாப்பு குழு திரு எஸ்.பி. ராஜா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்
நேற்று (23.06.2021) இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் சர்வதேச விதவைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நாளில் 20க்கு மேற்பட்ட மக்களுக்கு(விதவைகள்பெண்கள்) புடைவையும் உணவும் கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு ஊக்கமும் உட்சாகமும் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு வழங்கினார் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள்…
கொரோனாவின் கோரபிடியில் தவிக்கும் மக்களுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த இரண்டு வார ஊரடங்கில் 11.05.2021 முதல் தினமும் 120 முதியோர்களுக்கு மதிய உணவு முட்டையுடன் வழங்கப்பட்டு வருகிறது.
இன்னும் அதிக அளவில் உணவு தேவைப்படுவதால் உங்களின் உதவிகள் தேவைப்படுகிறது.
தொடர்புக்கு: 9444423600 / 7904195163
மார்ச் மாதம் முழுவதும் குழந்தைகளுக்கு இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்பட்டது..
இனிய உதயம் தொண்டு நிறுவனத்தில் தரமான காட்டன் துணிகளலான முககவசம் (Face Mask) பல வண்ணங்களில் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்..
ygfskjbsncdhbmdvhjvdk
dakkhbv
Recent Comments