செங்கல்பட்டு மாவட்டம் திருநீர்மலை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 29.08.2021 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குழந்தை  உரிமை பாதுகாப்பு தோழமை  கூட்டமைப்பு மற்றும் இனிய உதயம் தொண்டு நிறுவனம் இணைந்து குழந்தை உரிமை பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கு திறன் வளர்ச்சி  பயிற்சி நடைபெற்றது.  இந்த பயிற்சிக்கு

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்கள் தலைமையிலும், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் திரு சிவகுமார் அவர்கள் முன்னிலையில் ACDS நிறுவ

னத்தின் இயக்குனர் திரு தேவன்பு அவர்கள் பயிற்சி அளித்தார்.

இப்பயிற்சியில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும் CRPF செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக UNCRC, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், குழந்தைத் தொழிலாளர் (ஒழுங்குமுறை) மற்றும் (முறைப்படுத்துத

ல்) சட்டம் போன்றவற்றின் மீது பயிற்சி விரிவாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர் திரு சுரேஷ் அவர்கள் கிராம அளவில் குழந்தைகளுக்காக உள்ள வளங்கள், வாய்ப்புகள், குழந்தைகளுக்கான பிரச்சினைகள் எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் எப்படி சரிசெய்வது பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

அதன்பின் குழந்தை உரிமை பாதுகாப்பு குழு பங்கேற்பாளர்கள் அடுத்த மூன்று ஆண்டுகள் தங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கான செயல்திட்டம் குறித்து திட்ட வரைவுரை செய்தனர்

இறுதியாக குழந்தை உரிமை பாதுகாப்பு குழு திரு எஸ்.பி. ராஜா அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore More

 உலகை அச்சுறுத்தும் கொரோனா

                                                             

பொங்கல் விழா (PONGAL CELEBRATION)

மோரை-ஜன14. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக இன்று (14.01.2020) காலை 10.30 மணிமுதல் பொங்கல் விழா திருவள்ளூர் மாவட்டம் மோரை பஞ்சாயத்தில் உள்ள புதிய கன்னியம்மன் நகரில் மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா

முறைசாரா கல்வி மையம்(Non Formal Education Centre)

இனியஉதயம் தொண்டுநிருவனத்தின் முறைசாரா கல்வி மையம்(Non-Formal Education Centre) December 11 – Inauguration of the Non-Formal Education Center at JJ Nagar in Morai Panchayat on behalf of  Iniya Udaiyam charitable trust at